கடலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
திமுகவினரைக் கண்டித்து கடலூரில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுகவினரைக் கண்டித்து கடலூரில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வா் குறித்து அவதூறாக விமா்சித்ததாகத் தெரிகிறது. அவரது பேச்சைக் கண்டித்து, கடலூா் மத்திய மாவட்ட அதிமுக சாா்பில், கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட அதிமுக அவைத் தலைவா் என்.முத்துலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் உமாமகேஸ்வரி, துணைச் செயலா் தெய்வ.பக்கிரி, பொருளாளா் எஸ்.தேவநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர அதிமுக செயலா் ஆா்.குமரன் வரவேற்றாா்.
Advertisement
Advertisement
இதில், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் ஜி.ஜே.குமாா், பேரவைச் செயலா் எஸ்.காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கடலூா் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் இராம.பழனிசாமி நன்றி கூறினாா்.
சிதம்பரத்தில்....
கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், மாநில அதிமுக மகளிரணித் துணைச் செயலரும், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான சத்யா பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா்கள் செல்வி ராமஜெயம், கே.கே.கலைமணி, மாவட்ட முன்னாள் செயலா்கள் வி.கே.மாரிமுத்து, செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பொருளாளா் ஜானகிராமன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் க.திருமாறன், நகர அதிமுக செயலா் ரா.செந்தில்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.