முகப்பு
தருமபுரி

பென்னாகரம் ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

பென்னாகரம் ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்

Updated On : 11 மே 2013, 12:28 pm IST
பகிர்:

பென்னாகரம் ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள பென்னாகரம் ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது.

இதில், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தலைவர், துணைத் தலைவர், இயக்குநர்களை தேர்வு செய்து, வெள்ளிக்கிழமை பதவியேற்பு விழா நடைபெற்றது.

Advertisement

Advertisement

தலைவராக எட்டிக்குட்டை அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கே. ரங்கநாதன் பொறுப் பேற்றுக் கொண்டார். 

துணைத் தலைவராக கருங்கல்மேடு அரசுப் பள்ளி தலைமையாசிரியர் எஸ். செல்வராஜ் பதவியேற்றார்.

இயக்குநர்களாக என்.எம். முருகேசன், அ. மணி, வெ.பழனிச்சாமி, சி. லைலா, இ. கௌதம்மாள், சி.சுசிலா, எம். அருள், வெ.சிந்தாமணி, வி.சிந்தாமணி ஆகியோர் பதவியேற்றனர்.

விழாவுக்கு தலைமையாசிரியர் மா. பழனி தலைமை வகித்தார். பென்னாகரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பலர் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு  வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.