ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் சரிந்த கச்சா எண்ணெய்!
இன்றைய ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஒன்றுக்கு ரூ.8 சரிந்து ரூ.7,514 ஆக உள்ளது.
புதுதில்லி: அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
இதற்கிடையில், இன்றைய ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஒன்றுக்கு ரூ.8 சரிந்து ரூ.7,514 ஆக உள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஜூலை மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் பேரலுக்கு ஒன்றுக்கு 0.11 சதவீதம் சரிந்து ரூ.7,514 ஆக குறைந்தது.
Advertisement
Advertisement
உடனடி சந்தையில், தேவை குறைவாக இருந்ததாலும், ஒட்டுமொத்த வணிகர்களும் தங்கள் கையிருப்பை விற்றதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை சரிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
உலகளவில், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 0.37 சதவீதம் சரிந்து பேரல் ஒன்றுக்கு $80.45 ஆக வர்த்தகமானது. அதே நேரத்தில் நியூயார்க்கில் பிரென்ட் கச்சா எண்ணெய் 0.60 சதவீதம் சரிந்து பேரல் ஒன்று $82.67 ஆக உள்ளது.
Crude oil price fell by Rs 8 to Rs 7,514 per barrel in the futures trade on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.