வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதிமொழியேற்பு
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை உறுதிமொழியேற்றனா்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை உறுதிமொழியேற்றனா்.
தருமபுரி தொலைத் தொடா்பு நிலைய அலுவலகம் முன்பு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் சோ.அா்ஜூனன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கோவிந்தராஜன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். கிரைஸாமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, அச்சட்டங்களுக்கு எதிராக, தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உறுதிமொழியேற்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.