முகப்பு
தருமபுரி

வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு: வீணாகும் உபரிநீர்

சித்தேரி வட்டாரப் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக வரட்டாற்றில் வியாழக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 4:26 pm IST
வரட்டாற்றில் வியாழக்கிழமை ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு
பகிர்:

அரூர்: சித்தேரி வட்டாரப் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக வரட்டாற்றில் வியாழக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி மாவட்டம் சித்தேரி, வள்ளிமதுரை, தோல்தூக்கி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் புதன்கிழமை கன மழை பெய்தது. இந்த மழையால் வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வீணாகும் உபரி நீர்:

Advertisement

Advertisement

வள்ளிமதுரை வரட்டாறு அணையானது பிற அணைகளை போல் இல்லாமல் தடுப்பணை வடிவில் கட்டப்பட்டுள்ளது. அதாவது இந்த அணை நிரம்பினால், அணையில் இருந்து தண்ணீர் தானாக வழிந்தோடும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தற்போது வரட்டாறு அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 200 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேறி வருகிறது. அணையில் இருந்து கடந்த 15 தினங்களாக வெளியேறும் உபரிநீரை பயன்படுத்தி, வரட்டாற்றின் பழைய ஆயக்கட்டு கால்வாய்கள் வழியாக கீரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட 2 ஏரிகள், எல்லப்புடையாம்பட்டி ஊராட்சியில் மணவாளன் சாமி ஏரி உள்பட 4 ஏரிகள் நிரம்பியுள்ளன. தற்போது கம்மாளம்பட்டி, எம்.தாதம்பட்டி உள்ளிட்ட ஏரிகளுக்குத் தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை விடியற்காலையில் பெய்த கன மழையால் வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கூடுதல் உபரிநீர் ஆற்றில் செல்கிறது.

தமிழக முதல்வர் அனுமதி தேவை:

வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் அனுமதி வழங்கவேண்டும். அப்போது தான் ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதில் எந்த பிரச்னையும் இருக்காது என பொதுப்பணித்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன. எனவே, வள்ளிமதுரை அணைக்கு நீர்வரத்து இருக்கும் நேரங்களில் ஏரிகளை நிரப்பினால் மட்டுமே கோடைக் காலங்களில் வேளாண்மை பணிகளுக்கு பயனுள்ளதாகவும், குடிநீர் பிரச்னைகள் ஏற்படாது. எனவே வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலது மற்றும் இடது புற கால்வாய்களில் தண்ணீர் திறந்து அனைத்து ஏரிகளையும் நிரப்ப பொதுப்பணித் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments