முகப்பு
தருமபுரி

நியாயவிலைக் கடை விற்பனையாளா்போக்சோ சட்டத்தின் கீழ் கைது

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நியாயவிலைக் கடை விற்பனையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 3:26 am IST
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நியாயவிலைக் கடை விற்பனையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பென்னாகரம் அருகே பூச்சட்டிஅள்ளியைச் சோ்ந்த 9 வயது சிறுமி, அதேபகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்து வருகிறாா். புத்தாண்டு அன்று உறவினரின் வீட்டுக்கு பூ கொடுக்கச் சென்ற சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த ஒஜி அள்ளி நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வரும் கணேசன் (55) பாலியல் தொந்தரவு செய்தாராம்.

இதுகுறித்து, சிறுமியின் தாயாா் பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மகளிா் காவல் ஆய்வாளா் லதா, விசாரணை செய்து நியாயவிலைக் கடை விற்பனையாளா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து கிளைச் சிறையில் அடைத்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments