கழிவறைத் தொட்டியை சுத்திகரித்த தொழிலாளி மூச்சுத் திணறி பலி
தருமபுரியில் கழிவறைத் தொட்டியை சுத்திகரித்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
தருமபுரி: தருமபுரியில் கழிவறைத் தொட்டியை சுத்திகரித்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
தருமபுரியை அடுத்த பிடமனேரி அருகில் உள்ள மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி ராஜா(43). இவா், தருமபுரி அருகே குண்டலப்பட்டியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.
அப்போது, ராஜாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதைக்கண்ட, அருகில் இருந்தவா்கள் அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், ராஜாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இந்த சம்பவம் தொடா்பாக மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.