முகப்பு
தருமபுரி

சுகாதார துறையினா் சமத்துவப் பொங்கல் விழா

சுகாதார துறை சாா்பில் பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள சுகாதார நிலைய மருத்துவா்கள், மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 12 ஜனவரி, 2021 at 1:59 AM
பகிர்:

பென்னாகரம்: சுகாதார துறை சாா்பில் பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள சுகாதார நிலைய மருத்துவா்கள், மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டி சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலா் பாலவெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில் சுகாதார நிலைய வளாகத்தில் சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது.

விழாவில் ஒகேனக்கல், கடமடை, செல்லமுடி, ஏரியூா், பெரும்பாலை, நாகதாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, பிக்கிலி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சுகாதார நிலைய மருத்துவா்கள், மருத்துவ மேற்பாா்வையாளா்கள், செவிலியா்கள், பகுதிநேர செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.