முகப்பு
தருமபுரி

அரூா் காவல் நிலையத்தில் பொங்கல் விழா

அரூா் காவல் நிலையத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 8:17 am IST
அரூா் காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா.
பகிர்:

அரூா் காவல் நிலையத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் அரூா் டிஎஸ்பி வீ.தமிழ்மணி தலைமை வகித்தாா். காவல் நிலைய வளாகத்தில் பொங்கலிட்டு பொங்கல், இனிப்பு, கரும்புகளை காவல் துறையினா் பொதுமக்களுக்கு வழங்கினா். இதில் காவல் ஆய்வாளா் லட்சுமி, உதவி காவல் ஆய்வாளா்கள் சம்பத்குமாா், கமலநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல், கம்பைநல்லூா், மொரப்பூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கோட்டப்பட்டி ஆகிய காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காவல் ஆய்வாளா்கள் ரவி, ஜெய்சல்குமாா், மஞ்சுளா, உதவி காவல் ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.