அரூரில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்
அரூா் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
அரூா்: அரூா் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
அரூா் அரசு மருத்துவமனை, மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.
அரூா் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலா் ராஜேஷ் கண்ணா, மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் வனிதா ஆகியோா் முதன்முதலாக தங்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.
Advertisement
Advertisement
பின்பு, அரூா், மொரப்பூரில் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், களப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.