முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அடுத்தடுத்து 5 படங்கள்

​"வேதாளம்',  "அரண்மனை 1' மற்றும் 2, "மாயா', "பாகுபலி-1', "சென்னை-28 2' -ஆம் பாகம், " இது நம்ம ஆளு', "காஞ்சனா', "சிவலிங்கா' (தெலுங்கு) , "ஹலோ நான் பேய் பேசுறேன்' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களை அபி

Updated On : 10 ஜனவரி 2021, 6:00 am IST
பகிர்:


"வேதாளம்',  "அரண்மனை 1' மற்றும் 2, "மாயா', "பாகுபலி-1', "சென்னை-28 2' -ஆம் பாகம், " இது நம்ம ஆளு', "காஞ்சனா', "சிவலிங்கா' (தெலுங்கு) , "ஹலோ நான் பேய் பேசுறேன்' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவர் ரமேஷ் பி.பிள்ளை. தற்போது படத் தயாரிப்பில் இறங்கியுள்ள இவர்,  தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக  அடுத்தடுத்து 5 படங்களை தயாரிக்கிறார்.  

டான்சேண்டி இயக்கத்தில் ரெஜினா நடிக்கும் "ப்ளாஷ் பேக்',  பிரபுதேவா நடிப்பில் ராகவன் இயக்கவுள்ள படம்,  காஜல் அகர்வால் நடிப்பில் ராஜா சரவணன் இயக்கும் "ரவுடி பேபி',  பிரபுதேவா நடிப்பில் ஸ்ரீராம் எழுதி இயக்கவுள்ள "பிளாக் மேஜிக்',  தமிழரசன் இயக்கத்தில் உருவாகவுள்ள "கோஸ்ட்' உள்ளிட்ட படங்களை தயாரிக்கவுள்ளார்.  ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக த.அபிஷேக் -  த.ஆதித்யா - த.சித்தார்த் ஆகியோர் இந்தப் படங்களை தயாரிக்கின்றனர்.

சமீபத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்து  சசி இயக்கத்தில் வெளிவந்த  " சிவப்பு - மஞ்சள் - பச்சை'  படம் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெற்றது. தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க "ஆயிரம் ஜென்மங்கள்' மற்றும் "திரிஷ்யம்' பட வெற்றி கூட்டணியான மோகன்லால் - ஜீத்து ஜோஸப் மற்றும் த்ரிஷா நாயகியாக நடிக்க மும்மொழிகளில் உருவாகும் "ராம்' படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார். நல்ல கதைகளும், உணர்வுபூர்வமான காட்சியமைப்புகளும் என்றென்றும் வெற்றிபெறும் என்ற ஃபார்முலாவில் விநியோகம், தயாரிப்பு எனத் தொடர்ந்து செய்து வருகிறார் ரமேஷ் பி.பிள்ளை.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments