வைபவ் சூர்யவன்ஷி தயாராக இருக்கிறார், ஆனால்... பயிற்சியாளர் கூறுவதென்ன?
இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்க வைபவ் சூர்யவன்ஷி தயாராக இருப்பதாக பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்க வைபவ் சூர்யவன்ஷி தயாராக இருப்பதாக பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று (ஜூலை 4) நடைபெறுகிறது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற வைபவ் சூர்யவன்ஷி, அந்த தொடரில் களமிறக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அவர் களமிறக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்திய அணியில் விளையாடுவதற்கு இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தயாராக இருந்தாலும், தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனை அவ்வளவு எளிதாக பிளேயிங் லெவனிலிருந்து நீக்கிவிட முடியாது என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 போட்டிகளில் நம்பர் 1 வீரராக அபிஷேக் சர்மா உள்ளதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதேபோல, சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார். அவர் ஐபிஎல் தொடரிலும் நன்றாக விளையாடினார். அணியின் பயிற்சியாளராக நான் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அணியில் அறிமுகமாக காத்திருக்கிறார். அவர் ஐபிஎல் தொடரில் மிகவும் அற்புதமாக விளையாடினார். ஆனால், அணியில் உள்ள வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்க வேண்டும். தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமின்றி, அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் இது பொருந்தும் என்றார்.
இந்திய அணிக்காக கடைசியாக விளையாடிய மூன்று டி20 ஆட்டங்களில் அபிஷேக் சர்மா ஒரு அரைசதம் மற்றும் 49 ரன்கள் எடுத்தார். கடந்த மூன்று ஆட்டங்களில் சஞ்சு சாம்சன் 5,0 மற்றும் ஒரு ரன் முறையே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Bowling coach Morne Morkel has stated that Vaibhav Suryavanshi is ready to make his debut for the Indian team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.