முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே மினி வேன் கவிழ்ந்து 3 பேர் சாவு

பழனி அருகே புதன்கிழமை மினி வேன் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:47 am IST
பகிர்:

பழனி அருகே புதன்கிழமை மினி வேன் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வீரபத்ரன் மகன் பழனிச்சாமி(45).  இவரும் பொன்னாபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் மகன் ராமசாமி (60), டிகேஎன் புதூரை சேர்ந்தச் பழனிச்சாமி மகன் ரவி (30) ஆகியோர் தோட்டத்துக்கு வேலி அமைக்க கான்கிரீட் நிலை வாங்க வயலூருக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்று கான்கிரீட் நிலைகளை வாங்கிக் கொண்டு மினி வேனில் ஏற்றிக் கொண்டு பழனிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

  வேனை டிகேஎன் புதூரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் கருப்புச்சாமி ஓட்டி வந்துள்ளார். வேன் பழனி-உடுமலை சாலையில் பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்தபோது சாலையில் குறுக்கே நாய் ஓடியுள்ளது.  இதனால் டிரைவர் கருப்புச்சாமி திடீர் பிரேக் போட்டதால், வேன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.  இதில் வேனில் அமர்ந்திருந்த பழனிச்சாமி, ராமசாமி, ரவி ஆகியோர் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.  அவர்கள் மீது கான்கிரீட் நிலைகள் விழுந்துள்ளன.  இதில் பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  ராமசாமி பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவி கோவை  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertisement

Advertisement

  வேன் டிரைவர் கருப்புச்சாமி காயமின்றி தப்பினார். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments