பிஃபாவின் வரலாறு... 1942 உலகப் போரால் உலகக் கோப்பைக்கு வந்த சோதனை!
1942 உலகப் போரால் உலகக் கோப்பைக்கு வந்த சோதனையைப் பற்றி...
1942 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் சோகமான பக்கமாக வரலாற்றில் பதிவானது.
1930 (உருகுவே), 1934 (இத்தாலி), 1938 (பிரான்ஸ்) ஆகிய ஆண்டுகளில் முதல் மூன்று உலகக்கோப்பைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. பிஃபா விதிகளின்படி, நான்காவது உலகக்கோப்பைத் தொடர் 4 ஆண்டுகள் கழித்து 1942-ல் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
1936 ஆம் ஆண்டு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்த பிஃபா மாநாட்டில், இந்தத் தொடரை நடத்த ஜெர்மனி அதிகாரப்பூர்வமாக விருப்பம் தெரிவித்தது. ஜெர்மனிக்குப் போட்டியாக 1939-ல் உலகக்கோப்பையைத் தங்கள் நாட்டில் நடத்த பிரேசில் விண்ணப்பித்தது.
Advertisement
Advertisement
பிஃபா அமைப்பு எந்த நாட்டில் போட்டியை நடத்துவது என்று இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பே, 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் போரில் தீவிரமாக இறங்கியதால், 1942 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடர் அதிகாரப்பூர்வ ரத்து செய்யப்பட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற இரண்டு சுவாரசியமான போட்டிகள் நடைபெற்றன.
ஆர்ஜென்டீனாவின் படகோனியா (Patagonia) பகுதியில் 12 அணிகள் பங்கேற்ற ஒரு விசித்திரமான தொடர் நடந்தது. இதில், பிரதான கால்பந்து வீரர்கள், புலம்பெயர்ந்தோர், சர்க்கஸ் கலைஞர்கள் மற்றும் நாஜி வீரர்கள்கூட விளையாடினர். போரின் தீவிரத்துக்கு இடையில் நடைபெற்ற போட்டி என்பதால் இதன் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை.
அதேபோல், 1942 ஆம் ஆண்டு செப். 30 அன்று பெர்லின் ஒலிம்பிக் மைதானத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகளுக்கு இடையே ஒரு நட்பு ரீதியிலான போட்டி நடைபெற்றது. இது ஐரோப்பாவின் சிறந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியென விளம்பரப்படுத்தப்பட்டது.
இதில், ஸ்வீடன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஆனால், இந்த போட்டிகள் எதையும் பிஃபா அமைப்பு உலகக்கோப்பையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகள் காரணமாக 1942 மட்டுமின்றி, அதற்கு அடுத்த 1946 ஆம் ஆண்டு உலகக்கோப்பையும் நடத்தப்படவில்லை. உலகப்போர் முடிந்து 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1950 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றதா? இல்லையா?
-தொடரும்...
The World Cup was not held in 1942 or 1946 because of World War II. India qualified for the 1950 World Cup but withdrew before the tournament.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.