லாரி மோதி முதியவர் சாவு
பழனி அருகே பழையஆயக்குடி 3ஆவது வார்டு தேரடித் தெருவைச் சேர்ந்தவர் முத்து (75). இவர் புதன்கிழமை தனது மனைவிக்கு
பழனி அருகே லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
பழனி அருகே பழையஆயக்குடி 3ஆவது வார்டு தேரடித் தெருவைச் சேர்ந்தவர் முத்து (75). இவர் புதன்கிழமை தனது மனைவிக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த லாரி மோதியதில் முத்து பலத்த காயமடைந்தார். உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் கந்தவேல் கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் மகாராஷ்டிர மாநிலம் பாலம் மாவட்டம் பால்குச்சியைச் சேர்ந்த கோஸ்டி ராமாராகீரே (25)யை கைது செய்த ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.