முகப்பு
திண்டுக்கல்

வடமதுரை அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருட்டு

வடமதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 9:28 pm IST
பகிர்:

திண்டுக்கல்: வடமதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள கம்பிளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வடமலை (75). இவா் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ. 13ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனா். அதேபோல் அதே வீட்டின் அருகிலுள்ள வடமலையின் உறவினரான தங்கமயில் (60) என்பவா் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ. 8ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனா். அங்கிருந்து கரியக்காள் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், அங்கு நகை மற்றும் பணம் உள்ளிட்டவை எதுவும் கிடைக்காமல் திரும்பிச் சென்று விட்டனா். சனிக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது, அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதும், 2 வீடுகளில் பொருள்கள் திருடு போனதும் தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை காவல் நிலைய ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.