வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட ஒடிசா - மேற்கு வங்கக் கடற்கரைப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஞாயிற்றுக்கிழமை காலை 08. 30 மணி அளவில் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது ஒடிசாவின் பாலசோருக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவிலும், சாந்தபாலிக்கு வடகிழக்கே 60 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திகாவுக்கு தெற்கு-தென்மேற்கே 60 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, சந்த்பாலி மற்றும் திகா இடையே பாலசோருக்கு மிக அருகில் வட ஒடிசா கடற்கரையைக் கடக்கக்கூடும்.
அதன் பிந்தைய 24 மணி நேரத்தில், இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட ஒடிசா மற்றும் வட சத்தீஸ்கர் பகுதிகளைக் கடந்து செல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று (03-07-2026) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, சனிக்கிழமை (04-07-2026) காலை 0530 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
The well-marked low-pressure area over the Bay of Bengal has intensified into a depression.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.