முகப்பு
பெங்களூரு

இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள்: இன்று ஆலோசனைக் கூட்டம்

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்வுகளை சுமுகமாக நடத்த பெங்களூரில்

Updated On : 11 மே, 2013 at 12:42 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்வுகளை சுமுகமாக நடத்த பெங்களூரில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

பெங்களூர் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.பி.எம்., பி.எச்.எம்., பி.சி.ஏ., எல்.எல்.பி. ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 14-இல் தொடங்கி, ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது.

இந்தத் தேர்வை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மேற்கூறிய படிப்புகளுக்கான தலைமை கண்காணிப்பாளர்கள், தேர்வுத் துறை அதிகாரிகள், துறைத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு பெங்களூர் சென்ட்ரல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஞானஜோதி அரங்கத்தில் நடைபெறுகிறது.

Advertisement

இதில், துணைவேந்தர் திம்மேகெüடா பங்கேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.