முகப்பு
பெங்களூரு

நவீன வெல்டிங் மையம் திறப்பு

ஒடிசாவில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்தில் உள்நாட்டு நவீன வெல்டிங் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 11 மே 2013, 12:38 pm IST
பகிர்:

ஒடிசாவில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்தில் உள்நாட்டு நவீன வெல்டிங் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

பெங்களூர் எச்.ஏ.எல் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உள்நாட்டுச் தொழில் நுட்பத்தைக் கொண்டு, இயந்திர மனிதன் மற்றும் மனிதனால் செய்யக்கூடிய வெல்டிங் மையம் ஒடிசாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, ஒடிசாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்பு, விளையாட்டுத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திரா சிங் கலந்துகொண்டு, திறந்து வைத்தார்.

Advertisement

Advertisement

பின்னர் அவர் பேசியது:

உலகிலேயே இயந்திர மனிதனைக் கொண்டு, வெல்டிங் செய்யும் மையம், ரஷியா, இந்தியா ஆகிய இருநாடுகளில் மட்டுமே உள்ளது.

இந்த நவீன வெல்டிங் முறை, குறிப்பாக, விமான பாகங்கள் தயாரிப்பில் உதவியாக உள்ளன. சுமார் 17 வகை பாகங்களைத் தயாரிக்க, இந்த நவீன வெல்டிங் முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த மையத்தில் பணிபுரியும் பணியாளர்களின் உடல் நலம் காக்கப்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.