முகப்பு
பெங்களூரு

மகனை விஷம் அருந்த செய்து, பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பெங்களூர் கே.ஜி.ஹள்ளி காவல் சரகத்தில் மகனை விஷம் அருந்த செய்த பெண், தானும் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 11 மே 2013, 12:41 pm IST
பகிர்:

பெங்களூர் கே.ஜி.ஹள்ளி காவல் சரகத்தில் மகனை விஷம் அருந்த செய்த பெண், தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூர் கே.ஜி.ஹள்ளி மாருதிபாளையா பகுதியைச் சேர்ந்தவர் ருக்மிணி (32). மாநகர பேருந்தில் நடந்துநராகப் பணியாற்றி வந்த இவர், வியாழக்கிழமை மாலை தனது மகன் கிஷோரை விஷம் அருந்த செய்து, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  மயங்கிய நிலையில் கிடந்த கிஷோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கே.ஜி.ஹள்ளி போலீஸார், மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.