முகப்பு
பெங்களூரு

5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Updated On : 11 மே, 2013 at 12:41 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

பெங்களூர் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பு (எல்.எல்.பி) பருவத் தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2013-14-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

இதற்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஞானபாரதி வளாகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் மே 14-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. அரசு ஒதுக்கீட்டில் சேர ரூ. 400-க்கும் (எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.300), நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர ரூ.500-க்கும் (எஸ்சி.எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.350) விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க கடைசி நாள் ஜூன் 10. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல், ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும். ஜூன் 26-ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும். ஜூலை 29-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.