"பன்முக கலாசாரத்தின் அடையாளம் உருது'
நமது பன்முக பண்பாட்டு, கலாசாரத்தின் அடையாளமாக உருது மொழி திகழ்கிறது என்று முதல்வர் ஷீலா தீட்சித்
நமது பன்முக பண்பாட்டு, கலாசாரத்தின் அடையாளமாக உருது மொழி திகழ்கிறது என்று முதல்வர் ஷீலா தீட்சித் பெருமிதத்துடன் கூறினார்.
தில்லி தால்கடோரா விளாயாட்டு அரங்கத்தில் தில்லி உருது அகாதெமி சார்பில் புதன்கிழமை மாநாடு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 46 உருது ஆசிரியர்கள் மற்றும் உருது மொழியில் அதிக மதிப்பெண் பெற்ற 90 மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி ஷீலா தீட்சித் பேசியது:
Advertisement
Advertisement
உருது மொழி வளர்ச்சிக்கு தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தில்லி அரசின் இரண்டாவது அலுவல் மொழியாக உருது மொழி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் உருது அகாதெமி மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள உருது ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ. 11 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ. 2,000 ஆகவும், உருது பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை ரூ. 1,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன என்று ஷீலா தீட்சித் கூறினார்.
மாநாட்டில் தில்லி கல்வித் துறை அமைச்சர் கிரண் வாலியா, மொழிகள் துறை செயலாளர் எஸ்.எஸ். யாதவ், உருது அகாதெமியின் துணைத் தலைவர் அக்தார்-உல்-வாúஸ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னர், உருது ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியமாக ரூ. 1,500, உருது மொழியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை ரூ. 500 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.