முகப்பு
கிரிக்கெட்

பென் ஸ்டோக்ஸிடம் பேச முயற்சித்தேன், ஆனால்... மெக்கல்லம் கூறியதென்ன?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பேசியுள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 4:08 pm IST
பென் ஸ்டோக்ஸ் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பேசியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. கடைசி டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் பென் ஸ்டோக்ஸின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவரிடம் கேட்க முயற்சித்ததாகவும், ஆனால் ஓய்வு பெறும் முடிவில் அவர் தெளிவாக இருந்தார் எனவும் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கப் போவதாக என்னிடம் பென் ஸ்டோக்ஸ் கூறியவுடன், அவரது முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு கூறினேன். ஆனால், அவர் ஓய்வு பெறும் முடிவை எடுத்துவிட்டார். அவருடன் நான்கு ஆண்டுகள் ஒன்றாக பயணித்துள்ளேன். அவரது ஓய்வு முடிவை ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தது.

பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து பயணித்ததை கௌரவமாகக் கருதுகிறேன். அவரை நல்ல நண்பராகவே கருகிறேன். அவர் அணியை நன்றாக வழிநடத்தக் கூடியவர். அவர் எங்கு சென்றாலும், அவருக்கென தனி கூட்டம் என்பது இருக்கும். அவர் அணியில் இல்லாததை நாங்கள் கண்டிப்பாக மிஸ் செய்வோம். அவரைப் போன்ற வீரர் ஒருவரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்றார்.

இங்கிலாந்து அணிக்காக 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 7273 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The England team's head coach has spoken about captain Ben Stokes' retirement from international cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments