ஓய்வை அறிவித்ததில் வருத்தம் இல்லை; பயிற்சியாளராக விரும்பும் அஜிங்க்யா ரஹானே!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்ததை நினைத்து தனக்கு வருத்தமில்லை என அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்ததை நினைத்து தனக்கு வருத்தமில்லை என அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர், ஐரோப்பா டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்ததை நினைத்து தனக்கு எந்தவொரு வருத்தமுமில்லை என அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எனது ஓய்வு முடிவை அறிவித்தேன். இந்திய அணிக்காக நான் விளையாடிய கிரிக்கெட்டினை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். ஒரு விஷயத்தை செய்து முடித்த பிறகு, அது குறித்து ஒருபோதும் கவலைப்பட மாட்டேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவுக்கும் முன்பு கிட்டத்தட்ட அது குறித்து ஒரு மாதம் யோசித்தேன். ஓய்வு பெறும் முடிவை நினைத்து நாம் வருத்தப்படுவோமா என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். ஆனால், இல்லை என்பதே அதற்கான பதிலாக இருந்தது. இந்திய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய 200 சதவிகித உழைப்பைக் கொடுத்துள்ளேன்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை. நான் எல்லா விஷயங்களையும் சாதித்துவிட்டதாக நினைக்கிறேன். இந்திய அணியுடனான என்னுடைய கிரிக்கெட் பயணத்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட உணர்வு எனக்கு இருக்கிறது.
ஒரு கிரிக்கெட் வீரராக என்னுடைய அனுபவத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைத்து வைக்க நான் விரும்பவில்லை. உலக அளவில் என்னுடைய கிரிக்கெட் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உலகில் எங்கு நடைபெறும் லீக் போட்டியில் விளையாடினாலும், அங்கு என்னுடைய அனுபவத்தை வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
அனுபவமிக்க வீரராக கிரிக்கெட் விளையாடும் அதே நேரத்தில், என்னால் அணியின் ஒரு நல்ல ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் செயல்பட முடியும். ஏனெனில், என்னால் வீரர்களின் மனநிலையை நன்றாக புரிந்துகொள்ள முடியும். என்னுடைய அனுபவம் வீரர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றார்.
38 வயதாகும் அஜிங்க்யா ரஹானே இந்திய அணிக்காக 195 போட்டிகளில் விளையாடி 8414 ரன்கள் குவித்துள்ளார். அதில் 15 சதங்கள் மற்றும் 51 அரைசதங்கள் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 188.
ஐபிஎல் தொடரில் ரஹானே 197 போட்டிகளில் விளையாடி 5367 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 105*. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ரஹானே 8-வது இடத்தில் உள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
Ajinkya Rahane has stated that he has no regrets about announcing his retirement from international cricket.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.