சணல் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?
மாணவர்களே கல்வியில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது. கல்வியுடன் பொது அறிவும் கண்டிப்பாக தேவை. வாருங்கள் இந்த வார பொது அறிவுவை பார்ப்போம்.
* இங்கிலாந்தில் பதிவு எண் இல்லாமல் வாகனத்தைப் பயன்படுத்தும் அனுமதி பெற்றவர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் அரசி
* அமெரிக்காவிலுள்ள வாகன விண்வெளிக் கலங்களைத் தயாரித்து ஒன்று சேர்க்கும் நிலையத்தில் 4 கதவிகள் உள்ளன. இவைகள் தான் உலகிலேயே மிகப்பெரிய கதவுகளாக கருதப்படுகின்றன.
* உலகிலேயே அதிகமாகப் பயிரிடப்படுவது வெங்காயம்.
Advertisement
* தென் அமெரிக்காவில் விளையும் ஒருவகைச் செடியின் இலைகள் தான் உலகிலேயே மிகவும் இனிப்பானவை. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையை விட இது இனிப்பாக இருக்குமாம். இதன் பெயர் ஸ்டீவியா.
* பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி தரும் நாடு தைவான்.
* சணல் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் மேற்கு வங்காளம்.
* நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் குஜராத்
* நமது தலைமுடியின் அளவே இருக்கும் காரீயக் கம்பி, துத்தநாகக் கம்பி, அலுமினியக் கம்பி ஆகியவை தாங்கக்கூடிய எடையை விட அதிக எடையை நமது தலைமுடி தாங்கும்.
* கரும்பு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் உத்திரப்பிரதேசம்.