சத்தியபாமா பல்கலையில் 1013 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 1013 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜேப்பியார் வழங்கினார்.
சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 1013 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜேப்பியார் வழங்கினார்.
சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்நுட்பத் துறையில் பணி செய்வதற்கான ஆணை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய துணை வேந்தர் ஜேப்பியார், மாணவர்களுக்கு படிப்பு என்பது ஒரு பகுதிதான். ஆனால் அதைவிட பெரியது ஓழுக்கம், பணிவு, பண்பு. இதுதான் நம்மை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டுகிறது. இந்தப் பண்பை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பண்பு இருந்தால் வாழ்க்கையில் பல்வேறு வெற்றிகளைப் பெற முடியும் என்றார்.
Advertisement
Advertisement