ஜெகதீஸ் போஸ் நேஷ்னல் சயின்ஸ் உதவித்தொகை
இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு, ஜெகதீஸ் போஸ் நேஷ்னல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு, ஜெகதீஸ் போஸ் நேஷ்னல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இந்த உதவித்தொகைக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியாக 2013ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலை முதலாமாண்டில் (பி.எஸ்சி, பி.இ, பி.டெக், பி.ஸ்டட்ஸ், எம்.பி.பி.எஸ்) உள்ளிட்ட படிப்புகள் படித்துக் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் படிக்கும் கல்லூரிகள் மேற்கு வங்க மாநிலத்தின் கீழ் பதிவு பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000ம், பிஇ, பி.டெக், தகுதியான மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.80,000 வரை வழங்கப்படும்.
Advertisement
Advertisement
விண்ணப்பதாரர்கள் www.jbnsts.org என்ற இணையதளத்தில் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத்தேர்வு செப்.,29ம் தேதி நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு www.jbnsts.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.