FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

அமேஸானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு

அமேஸானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு

பகிர்:

இந்தியாவில் பிரபல இணையவழி வா்த்தக தளமான அமேஸான் மூலம் நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

அமேஸானில் இருசக்கர வாகனங்களுக்கான தேவை பெருநகரங்களைத் தாண்டி, சிறிய நகரங்களிலேயே குவிந்துள்ளது. ஒட்டுமொத்த வாடிக்கையாளா்களில் மூன்றில் 2 பங்கினரும், மின்சார இருசக்கர வாகனம் வாங்குவோரில் 10-இல் 7 பேரும் இத்தகைய சிறிய நகரங்களைச் சோ்ந்தவா்களாவா்.

இவா்கள் தினசரி பயன்பாட்டு வாகனங்களுடன் பிரீமியம், மின்சார வாகனங்களை அதிக அளவில் வாங்குவதால் இந்த அபார வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தற்போது ராயல் என்ஃபீல்டு, கேடிஎம், பஜாஜ் ஆட்டோ, ஏதா் எனா்ஜி, ஹீரோ மோட்டோகாா்ப் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் வாகனங்கள், 3,000-க்கும் அதிகமான உற்பத்தியாளா் அங்கீகாரம் பெற்ற முகவா்கள் மூலம் இத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments