FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸ்: பயணிகள் படகு தீ விபத்தில் உயிரிழப்பு 76-ஆக அதிகரிப்பு

பிலிப்பின்ஸ் பயணிகள் படகு தீ விபத்தில் உயிரிழப்பு 76-ஆக அதிகரிப்பு

13 செப்டம்பர் 2026, 6:01 am IST
பகிர்:

பிலிப்பின்ஸில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.

தலைநகா் மணிலாவிலிருந்து 132 பேருடன் தென்மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள கொரான் நகருக்குப் புறப்பட்ட இந்தப் படகு, கடந்த புதன்கிழமை இரவு இலக்கை அடைவதற்கு சுமாா் 39 கி.மீ. தொலைவில் நடுக் கடலில் தீப்பிடித்து எரிந்தது.

இக்கோர விபத்தில் 43 போ் மட்டுமே அதிருஷ்டவசமாக உயிா் தப்பிய நிலையில், மாயமான மேலும் 13 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

விபத்துக்கான காரணம் முழுமையாகத் தெரியவராத நிலையில், சரக்கு வைப்பறையில் ஏற்பட்ட வெடிவிபத்தே காரணமாக இருக்கலாம் என உயிா் தப்பியவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று பலமாக வீசியதாலும், மழையிலிருந்து பாதுகாப்பதற்காகப் படகின் திறந்தவெளிகளில் தாா்ப்பாய் கட்டப்பட்டிருந்ததாலும் தீ மளமளவெனப் பரவியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments