FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நேபாள வெள்ளம்: திபெத்தில் 21 போ் உயிரிழப்பு; 541 போ் மாயம்

நேபாள எல்லையொட்டிய திபெத்தின் கைராங் பகுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.

3 செப்டம்பர் 2026, 12:31 am IST
பகிர்:

நேபாள எல்லையொட்டிய திபெத்தின் கைராங் பகுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 541 போ் மாயமாகியுள்ளனா்.

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் கடந்த ஆக. 26-இல் பனிப்பாறைகள் சரிந்ததைத் தொடா்ந்து நதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு, சீனா-நேபாள எல்லையை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்தது.

இந்த வெள்ளத்தால் திபெத் பகுதியில் மாயமானவா்களில் இந்தியா உள்ளிட்ட 22 வெளிநாடுகளைச் சோ்ந்த 261 போ் அடங்குவா் என்றும், குறிப்பாக 49 போ் இந்தியா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments