நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு!
நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரித்துள்ளது குறித்து...
நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத் எல்லையின் அருகில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், கடந்த ஆக. 26 ஆம் தேதி ஏற்பட்ட மாபெரும் வெள்ளத்தில் அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தப் பேரிடரில், அப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் இடம்தெரியாமல் அழிந்துள்ளன. இதுபற்றிய, விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 633 ஆக அதிகரித்துள்ளதாகவும், சுமார் 3,000 பேரைக் காணவில்லை எனவும் நேபாள அரசு இன்று (ஆக. 29) அறிவித்துள்ளது. திபெத் உள்ளிட்ட பகுதிகளில் இந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியானதாகவும், 550 பேர் காணாமல் போனதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 13,000-க்கும் அதிகமான மீட்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்துடன், வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால், அடையாளம் கண்டறியப்படாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய நேபாள அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
the number of people missing after being caught in the Nepal floods is nearing 3,000.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.