சிபிஎஸ்இ பிளஸ் 2: மொத்த தேர்ச்சி விகிதம் 85.20%
சிபிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி சதவீதம் பற்றி..
சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்தாண்டு 85.20 சதவிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய (சிபிஎஸ்இ) பிளஸ் 2 தேர்வு நாடு முழுவதும் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 17.68 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்தாண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 17,80,365 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 17,68,968 பேர் தேர்வெழுதிய நிலையில், 15,07,109 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது 85.20 சதவீத தேர்ச்சியாகும். கடந்தாண்டைக் காட்டிலும் இது 3.19 சதவீதம் குறைவாகும்.
Advertisement
Advertisement
அதிகப்பட்சமாக திருவனந்தபுரத்தில் 95.62 % தேர்ச்சி பதிவாகியுள்ளது. இரண்டாவதாக சென்னை 93.84 சதவீதமும், மூன்றாவது இடத்தில் பெங்களூர் 93.19 சதவீதமும், நான்காவது இடத்தில் விஜயவாடா 92.77 சதவீதமும், ஐந்தாவது இடத்தில் தில்லி மேற்கில் 92.34 சதவீதமும் பெற்றுள்ளன.
இந்தாண்டு தேர்வில் 82.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் 88.86 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே 6.73 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
The Central Board of Secondary Education (CBSE) announced the Class 12 board examination results today, May 13, 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.