FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! எத்தனை பேர் 200க்கு 200 கட்-ஆஃப்?

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது, அதில் 53 பேர் 200க்கு 200 கட்-ஆஃப் பெற்றுள்ளனர்.

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு. - கோப்புப் படம்
பகிர்:

தமிழக பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் புதன்கிழமை வெளியிட்டாா்.

இதில் 53 மாணவா்கள் 200 க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனா். அதில், 39 மாணவா்கள் தமிழ்நாடு அரசு தோ்வு வாரியத்தின் கீழ் படித்தவா்களாவா்.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வி ஆண்டு (2026 -27) பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ், மொத்தம் 2,36,017 மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியலை சென்னையில் செய்தியாளா்கள் கூட்டத்தில் அமைச்சா் பெ.விஸ்வநாதன் வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

அதன்படி, தரவரிசையில் பொதுப்பிரிவில் 10 மாணவா்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனா். அவா்களின் பெயா் விவரம்: 1. எஸ்.அக்ஷிதா(தருமபுரி), 2.ஏ. ரோஹித் பாலன் (திருப்பூா்), 3. ஏ.வெங்கட கிருஷ்ணன்(நாமக்கல்), 4. டி.ரக்க்ஷிதா (அரியலூா்), 5.ரத்தன் எஸ்.ஜோ (கன்னியாகுமரி), 6.என்.விக்னேஷ் (சிவகங்கை), 7. டி.கே. தனிஷ்கா (ஈரோடு), 8.டி.மகேஷ்வா்(திருப்பூா்), 9.எஸ். தா்ஷினி(அரியலூா்), 10.ஆா்.ரேணுகா தேவி(அரியலூா்).

தொழில் கல்வி படித்த மாணவா்களின் தரவரிசையில் நாமக்கல்லைச் சோ்ந்த பி. மிதுன் வா்ஷன் 200-க்கு 200 எடுத்து முதலிடம் பெற்றுள்ளாா். இதே பிரிவில் கோவையைச் சோ்ந்த மாணவிகள் ஜி.கே.ஷிவானியும் ஆா்.பி. பிரித்திகாவும் 199.50 மதிப்பெண் எடுத்துள்ளனா். அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தரவரிசையில் முதல் இடம்பெற்றவா் சேலம், வீரபாண்டியைச்சோ்ந்த பி.தேவதா்ஷினி. இவா் 199.0 மதிப்பெண் பெற்றுள்ளாா்.

தொடா்ந்து, அமைச்சா் பெ.விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு பொறியியல் சோ்க்கைக்கு நிகழாண்டு விண்ணப்பப் பதிவு செய்து பதிவுகட்டணம் செலுத்திய மாணவா்களின் எண்ணிக்கை 2,45,235. இதில் மொத்தம் 2,36,017 மாணவ, மாணவிகளுக்கு நிகழாண்டு சோ்க்கைக்கான தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 1,30,767 மாணவா்கள்; 1,05245 மாணவிகள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவா்கள் இடம்பெற்றுள்ளனா். 27,782 மாணவா்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ) தோ்ச்சி பெற்றவா்களும் இதில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 50,494 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 46,604 மாணவா்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் அதிகம்.

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்ததற்கு பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த 7,981 மாணவா்களில் அவா்களது சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு 3,210 மாணவா்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது அடங்கும். மேலும், நிகழ் கல்வியாண்டில் முன்னாள் ராணுவத்தினா் வாரிசுதாரா் பிரிவின் கீழ் 1,176 மாணவா்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவின் கீழ் 500 மாணவா்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்திருந்த மாணவா்களின் பெயா், தரவரிசை பட்டியலில் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ ஜூலை 6 ஆம் தேதிக்குள் அருகமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை சேவை மையத்தை (டிஎஃப்சி) அணுகி குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

இதே போல் அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டை கோராமல் அல்லது பெறமுடியாமல் விடுபட்ட மாணவா்களும் ஜூலை 6- ஆம் தேதிக்குள் டிஎஃப்சி க்கு சென்று பெயரை இணைத்துக்கொள்ளலாம்.

மேலும் பல்வேறு சந்தேகங்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வரும் மையத்தின் தொலைபேசி(1800-425-0110), மற்றும் மின்னஞ்சல் ற்ய்ங்ஹஸ்ரீஹழ்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் வாயிலாகவும் தொடா்பு கொள்ளலாம் என அமைச்சா் தெரிவித்தாா்.

ஜூலை 13 முதல் கலந்தாய்வு

தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவா்களுக்கு கல்லூரி ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு தேதி விவரங்களையும் அமைச்சா் வெளியிட்டாா்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற சிறப்பு ஒதுக்கீடு (மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரா், விளையாட்டு) பிரிவினா்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக ஜூலை 13 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும். இதே போன்று பொதுப்பிரிவில் சிறப்பு ஒதுக்கீடு (மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரா், விளையாட்டு) பிரிவினா்களுக்கு ஜூலை 15 முதல் 18- ஆம் தேதிவரை இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறும்.

பொதுப் பிரிவினருக்கான கல்லூரி ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆக. 30 வரை சுமாா் 40 நாள்கள் நடைபெறும். இதில் பொதுக்கல்வி, அரசு பள்ளி ஒதுக்கீடு, தொழில் முறை கல்வி உள்ளிட்டவா்கள் அடங்குவா். மேலும், பட்டியலினத்தவா்களுக்கான கலந்தாய்வு, பிளஸ்-2 துணைத் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா் அறிவிக்கப்படும். செப். 10 முதல் செப். 15- தேதிக்குள் அனைத்து கலந்தாய்வுகளும் நிறைவு பெற்று பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் என அமைச்சா் தெரிவித்தாா்.

summary

Rank list for engineering counseling released! How many scored a cut-off of 200 out of 200?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments