ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வரும் ஜூலை 1-ல் வெளியாகும் என்று அரசு தெரிவித்திருப்பது பற்றி...
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வரும் ஜூலை 1-ல் வெளியாகும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
சிபிஎஸ்இ-ன் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளிவந்த நிலையில், வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியிட இருந்த தரவரிசைப் பட்டியல் வரும் ஜூலை 1 ஆம் தேதி வெளியிடப்படும்.
Advertisement
Advertisement
மேலும், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) தேதிகளும் வரும் ஜூலை 1 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்புகாலம் ஜூலை 1 முதல் 6 வரை வழங்கப்படும்.
இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களைநேரில் அனுகலாம் என்று பெ. விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.
Higher Education Minister P. Viswanathan has announced that the rank list for Tamil Nadu engineering student admissions will be released on July 1.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.