முகப்பு
தமிழ்நாடு

பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு குறித்து...

Updated On : 30 ஜூன் 2026, 9:36 am IST
அண்ணா பல்கலை. - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை (டிஎன்இஏ 2026) உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் நாளை(ஜூலை 1) காலை வெளியிடுகிறார்.

நிகழாண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்பு மறு மதிப்பீட்டு முடிவுகள் (ஜூன் -21) தாமதமாக வெளியிட்டது.

இதனால், தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் முன்னதாக வெளியிடப்படவிருந்த நிலையில், தாமதமாக நாளை வெளியிடப்படுகிறது.

Advertisement

Advertisement

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) தேதிகளும் நாளை அறிவிக்கப்படும். வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு கால அவகாசம் ஜூலை 1 முதல் ஜூலை 5- ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை அனுகி தீர்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி ஜூன் 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இதில், மொத்தம் 3.02 லட்சம் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்தனர்.

விண்ணப்பத்தவர்களில் 2,43,575 பேர் தமிழகத்தைச் சோ்ந்தவர்கள்; பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளை சோ்ந்தவர்கள் 1,645 பேர். இதில், 103 பேர் இலங்கைத் தமிழர்களும் ஆவர்.

summary

Higher Education Minister P. Viswanathan will release the rank list for Tamil Nadu engineering student admissions (TNEA 2026) tomorrow (July 1) morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments