முகப்பு
தமிழ்நாடு

ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!

ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளரைப் பற்றி...

Updated On : 7 ஏப்ரல், 2026 at 2:47 AM
லீமா ரோஸ் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். - எக்ஸ்.
பகிர்:

தமிழ்நாட்டில் போட்டியிடும் ரூ. 1,000 கோடி சொத்துள்ள பணக்கார வேட்பாளர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டுக்கு ஏப். 23 ஆம் தேதி அதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக ஏப். 9 ஆம் தேதி புதுச்சேரிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், தவெக, நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன.

Advertisement

தேர்தல் பத்திரங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மற்றும் மகன் ஜோஸ் சார்லஸ் இவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையிலும், மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக லாட்டரி மார்ட்டின் நிறுவனம், திமுகவுக்கு சுமார் ரூ. 509 கோடியையும், திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ. 542 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 100 கோடியையும் நன்கொடையாக வழங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தது.

மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், தனது மகனின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து, பின்னர், கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகி, பிப். 17 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த சில நாள்களிலேயே அவருக்கு மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தலின் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று (ஏப். 6) வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய தீவிரம் காட்டினர். தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, தமிழகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் போட்டியிடும், பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை லீமா ரோஸ் பெற்றுள்ளார். தன்னிடம் ரூ.1,048 கோடி சொத்து மதிப்பு இருப்பதாகக் கணக்கு காட்டியுள்ளார் லீமா ரோஸ்.

கணவர் லாட்டரி அதிபர் மார்டினின் பெயரில் ரூ.4,159 கோடி சொத்தும், மகன் ஜோஸ் மார்டின் பெயரில் ரூ.665 கோடி சொத்துகள் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பிரமாணப் பத்திரத்தில், லீமா ரோஸ் பெயரில் நகைகள் உள்பட ரூ. 139.62 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளையும், நிலம் மற்றும் வீடுகள் உள்பட ரூ. 909.94 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் மார்ட்டின் பெயரில் ரூ. 3,262.01 கோடி அசையும் சொத்துக்களையும் ரூ. 887.36 கோடி அசையா சொத்துக்களையும் கொண்டுள்ளார். மகன் ஜோஸ் மார்ட்டின், ரூ. 225.56 கோடி அசையும் சொத்துகளையும் ரூ. 439.21 கோடி அசையா சொத்துகளைக் கொண்டுள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

summary

 Leema Rose, wife of lottery tycoon Santiago Martin and AIADMK candidate from the Lalgudi constituency in Trichy district, has emerged as the wealthiest candidate in the Tamil Nadu Assembly elections, with combined family assets exceeding ₹5,000 crore as per her election affidavit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments