3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி! யார் தெரியுமா?
தமிழ்நாடு, புதுச்சேரி என இரண்டு பேரவைத் தேர்தல்களில் 3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 3 வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்ட லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினர் மூன்று பேரும் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார்கள்.
லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு 2,739 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டின் மிகப் பணக்கார வேட்பாளராக அறியப்பட்ட லீமா ரோஸ் இப்போது, மிகப் பணக்கார எம்எல்ஏவாகவும் மாறியிருக்கிறார்.