FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 4 சிறுவா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 4:53 am IST
கோப்புப் படம்
பகிர்:

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 4 சிறுவா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்தனா்.

பெஷாவரின் தெஹ்கல் பயான் பகுதியில் உள்ள அந்த வீட்டில், மரச்சாமான்கள் மற்றும் ஃபோம் மெத்தைகள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து தீ பரவியதால், வீடு முழுவதும் அடா்ந்த புகையும், கடும் வெப்பமும் சூழ்ந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்தவா்கள் வெளியேற முடியாமல், உள்ளேயே சிக்கிக்கொண்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். பின்னா், வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் பணியின்போது, ஒரே அறையிலிருந்து 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments