முகப்பு
தமிழ்நாடு

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

தவெக தலைவர் விஜய் உருவத்தை ஹாலோகிராம் மூலம் உருவாக்கி பிரசாரம் செய்து வருகிறார் கும்பகோணம் தவெக வேட்பாளர் வினோத் ரவி.

Updated On : 13 ஏப்ரல் 2026, 2:02 pm IST
ஹலோகிராமில் விஜய் - கும்பகோணம் தவெக வேட்பாளர் வினோத் ரவி நூதன பிரசாரம்.
பகிர்:

தவெக தலைவர் விஜய் உருவத்தை ஹாலோகிராம் மூலம் உருவாக்கி பிரசாரம் செய்து வருகிறார் கும்பகோணம் தவெக வேட்பாளர் வினோத் ரவி.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் சில ஊர்களில் பிரசாரத்தை ரத்து செய்தார்.

Advertisement

Advertisement

காரைக்குடியில் இரு நாள்களுக்கு முன் நடைபெற்ற பிரசாரத்தில் சைக்கிள் ஓட்டி வந்த விஜய் அனுமதியளிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னர் தாமதமாக வந்ததால் அங்கு காத்திருந்த மக்களிடம் பேசாமல் சென்றுவிட்டார். தொடர்ந்து, கன்னியாகுமரியில் நேற்று பிரசாரம் செய்த விஜய் இளைஞர்கள் மற்றும் மீனவர்களுக்கானத் திட்டங்களை அறிவித்தார்.

விஜய் பிரசாரத்திற்கு செல்லாத தொகுதிகள் சிலவற்றில் அவரது உருவபொம்மையை வைத்து வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வந்தனர்.

இந்த நிலையில், கும்பகோணம் தொகுதி தவெக வேட்பாளர் செய்த நூதன பிரசாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய் உருவத்தை ஹாலோகிராம் மூலம் மிகவும் தத்ரூபமாக உருவாக்கி அவரே பேசுவது போன்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார் கும்பகோணம் வேட்பாளர் வினோத் ரவி.

மக்களிடம் இது வரவேற்பைப் பெற்றாலும் விஜய் நேரில் வந்து அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்யாதது விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

summary

Vijay's Image as a Hologram... TVK Candidate's Novel Campaign!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.