முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம்

திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரத்துக்கு வருகை தந்துள்ள தவெக தலைவர் விஜய் சாலை வலம் மேற்கொண்டுள்ளார்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 3:59 pm IST
திருச்சியில் விஜய்.
பகிர்:

திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரத்துக்கு வருகை தந்துள்ள தவெக தலைவர் விஜய் சாலை வலம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது சாலையின் இருபகுதியிலும் திரண்டிருந்த மக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தவெக தலைவா் விஜய் முதல்கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்தபோது கிழக்கு தொகுதிக்குள்பட மரக்கடையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசி, வாக்கு சேகரித்தாா்.

இதையடுத்து, இரண்டாவது கட்டமாக ஏப்.14 ஆம் தேதி மீண்டும் பிரசாரம் செய்ய காவல்துறையும் அனுமதி வழங்கியது.

Advertisement

Advertisement

ஆனால், விஜய் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ஏப்.19ஆம் தேதி பிரசாரத்துக்கு காவல்துறை மீண்டும் அனுமதித்துள்ளது. கடந்த முறையைப் போலவே 27 கட்டுப்பாடுகளுடன் அனுமதித்துள்ளது.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்த விஜய், விமான நிலையத்திலிருந்து தனது தோ்தல் பிரசார வாகனத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.

பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தோ்தல் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்கின்றனா் தவெகவினா்.

விஜய் வருகையையொட்டி, திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

summary

TVK President Vijay, who arrived to campaign in the Trichy East constituency, is conducting a roadshow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.