புதுச்சேரி அமைச்சரவையில் அதிமுக இடம் கேட்கும்: அன்பழகன்
அதிமுக பொதுச்செயலரும் உப்பளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ஆ.அன்பழகன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் மீண்டும் முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் அமையப் போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அதிமுக இடம் கேட்கும் என்று இக்கட்சியின் புதுச்சேரி செயலரும் உப்பளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ஆ. அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது, நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 6-வது முறையாகப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்த அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. மேலும், புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்கப்போகிறது.
அந்த ஆட்சியின் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவதற்கு எங்கள் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி வாயிலாக அனுமதி கேட்போம். யாரும் தர்மத்துக்காகக் கட்சி நடத்துவதில்லை. மேலும், புதுச்சேரியைப் பொறுத்தவரை முதல்முறையாக வெற்றி பெற்றவர்கள்கூட சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சராகப் பதவி வகித்துள்ளனர்.
Advertisement
Advertisement
5-வது முறையாக வெற்றி பெற்றுள்ளேன். அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்னை வேறு கட்டத்துக்கு உயர்த்த வேண்டும் என்று கூட வாக்கு அளித்து இருக்கலாம். மேலும், இத் தொகுதியில் 5-வது முறையாக இப்போது வெற்றி பெற்றுள்ளேன். அதற்காகத் தொகுதி மக்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றுவேன் என்றார் அன்பழகன்.
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி:
அதிமுக அன்பழகன் ..9,008
தவெக சிவா ...7,826
திமுக அனிபால் கென்னடி ..5,320
1,182 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
A. Anbalagan, the AIADMK General Secretary and the successful candidate from the Uppalam constituency, stated.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.