ராதாபுரம் தொகுதியில் பேரவைத் தலைவர் அப்பாவு பின்னடைவு
ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் பேரவைத் தலைவருமான அப்பாவு பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் பேரவைத் தலைவருமான அப்பாவு பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் 13 சுற்று முடிவில் அவர் 31,356 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். சதீஷ் கிறிஸ்டோபர் 35,318 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இருவருக்கும் வாக்கு வித்தியாசம் 3,962 ஆகும். தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
Advertisement
அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலை உள்ளார்.
பிற்பகலுக்குப் பிறகு தொகுதிகளின் வெற்றி நிலவரம் தெரிய வந்துவிடும்.