தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை!
தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
Advertisement
Advertisement
அதன் தலைவர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். பிற்பகலுக்குப் பிறகு தொகுதிகளின் வெற்றி நிலவரம் ஒவ்வொன்றாக தெரிய வரும்.
தேர்தலில் பெறும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் அடுத்த என்ன செய்யலாம் என்கிற முக்கிய ஆலோசனையில் விஜய் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த ஆலோசனையில் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
TVK President Vijay is engaged in an urgent consultation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.