முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
ஆளும் திமுக அரசின் கூட்டணி 73 இடங்களைப் பிடித்து ஆட்சியை இழந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அவர் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்டாலின் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, தவெக தனிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் விஜய் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
M.K. Stalin Resigns as Chief Minister
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.