முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்
முதல்வர் விஜய்யிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தது குறித்து...
முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய்யை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைகுலுக்கி, கட்டியணைத்து வரவேற்றார்.
ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய், பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தினார். இதையடுத்து, மு.க. ஸ்டாலினும் பொன்னாடைப் போர்த்தி முதல்வர் விஜய்க்கு தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் - மு.க. ஸ்டாலின் அமர்ந்து சில நிமிடங்கள் பேசினர்.
இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
DMK President M.K. Stalin has stated that he offered suggestions to Chief Minister Joseph Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.