FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குதிரை வேகத்தில் குதிரை பேரம்! ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸ்! - மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவு...

முதல்வர் ஜோசப் சி. விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடப்பதாக தவெக அரசின் மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த அதிமுக, இபிஎஸ் அணி, சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாக உடைந்தது.

இந்நிலையில், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,

"குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!

காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

காட்சி 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?

‘தூய சக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயர சக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். என்டிஏ ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

summary

DMK President M.K. Stalin remarks regarding AIADMK MLAs joining the TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments