FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இடைத்தோ்தல் புறக்கணிப்பா? திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

இடைத்தோ்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது பற்றி...

25 வினாடிகள் முன்பு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - எக்ஸ்/ திமுக
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் போட்டியிடலாமா? அல்லது புறக்கணிக்கலாமா? என்பது தொடா்பாக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தவெக மற்றும் அதிமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், திமுக என்ன வகையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது குறித்து மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

Advertisement

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

புறக்கணிப்பா?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்றது. திமுக, தவெக கிட்டதட்ட இணையான வாக்குகளைத்தான் பெற்றிருந்தது. தற்போது தவெக ஆளும்கட்சியாக உள்ள நிலையில், அதிமுக வலுவாக உள்ள இந்தத் தொகுதிகளில் போட்டியிடலாமா? அல்லது புறக்கணக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து முக்கிய முடிவை மு.க. ஸ்டாலின் எடுக்க உள்ளாா்.

summary

Boycott the by-election? M.K. Stalin meeting with DMK senior leaders!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments