FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஏழைகளின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் விஜயகாந்தின் புகழ் நீடுவாழ்க! மு.க. ஸ்டாலின்

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவு...

விஜயகாந்துடன் மு.க. ஸ்டாலின் - x / mk stalin
பகிர்:

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு இன்று (ஆக. 25) பிறந்தநாள்.

அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று!

அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!" என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள கேப்டனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

summary

DMK leader M.K. Stalin post on the occasion of Captain Vijayakanth's birthday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments