தாராபுரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பிரசாரம்!
சாலைவலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, அந்தக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை(அக். 2) பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், திமுக சார்பில் சுகன்யா போட்டியிடும் நிலையில் அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோா் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், என். கயல்விழி செல்வராஜ், அ.ரா. சக்கரபாணி உள்ளிட்டோரும் தாராபுரத்தில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, மு.க. ஸ்டாலின் நாளை(அக். 2) பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமராவதி சிலையில் இருந்து பொள்ளாச்சி சாலை பெரிய கடை வீதி வழியாக சாலைவலம் சென்று வாக்கு சேகரிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, மாருதி நகர் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
DMK leader M.K. Stalin will campaign tomorrow (Oct. 2) in support of the party's candidate, Suganya, who is contesting the by-election in the Dharapuram constituency.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.