FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இடைத்தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருப்பது பற்றி...

8 வினாடிகள் முன்பு
மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

தேர்தல் பணி, கட்சி நிர்வாகிகளின் பணிகள் குறித்து துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் அவர் இந்த ஆலோசனையை மேற்கொண்டார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் அக்.2ஆம் தேதியும், மதுராந்தகத்தில் அக்.3ஆம் தேதியும் மு.க.ஸ்டாலின் பிராசரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த நடைபெற்றிருக்கிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 7 பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, அக். 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் திமுக சாா்பில் மதுராந்தகம் வேட்பாளராக இ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதி வேட்பாளராக செள.சுகன்யாவும் அறிவிக்கப்பட்டுள்ளனா். மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இடைத்தேர்தலையொட்டி ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அங்கு முகாமிட்டுத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

summary

DMK President M.K. Stalin held a consultative meeting regarding the Madurantakam and Dharapuram by-elections at Anna Arivalayam in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments